கால்நடை மருத்துவ அறிவியல் கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் அவசியத்தின் ஆளும் இவற்றால் ஏற்படும் ஆடு மாடு மற்றும் பறவைகளின் உற்பத்திப் பெருக்கத்தின் அவசியம் பயன்களை ஒழுங்குமுறை படுத்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Veterinary and Animal Science University) 1989இல் சென்னை வேப்பேரியில் துவங்கப்பட்டது. தமிழகத்தில் கால்நடை மருத்துவக் கல்வி கால்நடை மருத்துவ கல்லூரி மூலம் 1903 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இக்கல்லூரி பின்னர் சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைந்து (B.V.Sc) என்ற பட்டம் வழங்கப்பட்டது.
Table of Contents
தகுதி:
பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு நுழைவுத் தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 3 பகுதிகளை கொண்டது.
குறிப்பு:
சமீபத்தில் அரசு ஆணைப்படி நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு நடத்த விட்டால் பிளஸ் டூ தேர்வில் மாணவர் பெற்ற மதிப்பெண் சதவீத அடிப்படையில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
காலம்
இப்படிப்பு மொத்தம் ஐந்து ஆண்டுகால படிப்பாக இதில் நான்கரை ஆண்டு காலம் படிப்பு 6 மாத காலம் இன்டர்ன்ஷிப் பயிற்சி நடைபெறும் பண்ணைகளிலும் இன்டர்ன்ஷிப் பயிற்சி தரப்படும் இந்த பயிற்சி காலத்தில் அரசு மற்றும் ஐ சி ஏ ஆர் மூலம் உதவித்தொகை வழங்கப்படும்.
பட்டப்படிப்புகள்
- பி.வி.எஸ்சி அண்ட் ஏஜ்
- பி டெக்
பட்ட மேற்படிப்புகள்
எம்.பி.எஸ்சி மற்றும் பி.எச்.டி
- அனிமல் பயோடெக்னாலஜி அணிமல் ஜெனிடிக் அண்ட் கிரீட்டிங்
- வெட்னரி பார்மலஜி
- வெட்ரினரி கிளினிக் மெடிசின்
- வெட்னரி மைக்ரோ பயாலஜி
கல்லூரிகள்
- சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி சென்னை.
- கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாமக்கல்.
வேலை வாய்ப்புகள்
- கால்நடை மருத்துவ பட்டதாரிகள் அரசு வேலை மட்டுமே நம்பியிராமல் சுயமாக டிராபிக் செய்ய ஆரம்பித்துவிட்டனர். நகரங்களில் வளர்ப்புப் பிராணிகளுக்கான சிகிச்சை தருவதால் நல்ல வருமானம் பெறுகின்றனர். கிராமப்பகுதிகளில் மாடு ஆடு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் பொருள் இடுகின்றனர்.
- நாமக்கல் ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களிலும் அவற்றின் சுற்றுப் பகுதிகளிலும் கோழிப்பண்ணை பெரும் அளவில் உள்ளதால் அங்கு உள்ள கோழிப் பண்ணைகளிலும் கால்நடை மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
- பண்ணைகள் ஆரம்பிக்க திட்ட அறிக்கை தயாரித்து தருவது ஆலோசனைகளை பெறுவது மருந்து நிறுவனங்கள் பிரதிநிதியாக பணியாற்றுவது போன்ற வேலைவாய்ப்புகள் உள்ளன.
- பால் பண்ணைகள் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் கோழி குஞ்சு பொரிப்பகம் தீவன உற்பத்தி நிறுவனங்கள் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உள்ளது.