எம்.பி.பி.எஸ் பட்டப் படிப்பை போல பல் மருத்துவ படிப்பும் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்ற படிப்பாகும். பற்களை சீரமைப்பது செயற்கை பற்களை பொருத்துவது வாய் மற்றும் பல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பது பல நோய்களை குணப்படுத்துவது மற்றும் அவற்றின் குறைபாடுகளை சரி செய்வது பல் மருத்துவத்தில் பணிகளாகும்.
இந்தியாவில் ஓராண்டில் 15,000 பல் மருத்துவர்கள் படித்து பட்டம் பெற்று வெளி வருகின்றனர் பல் மருத்துவராக பணியாற்ற பிடிஎஸ் எனப்படும் (BDS- Bachelor of Dental Surgery) என்ற இளநிலை பட்டம் பெற வேண்டும். இவற்றின் படிப்பு காலம் 5 ஆண்டு ஆகும். இதில் நான்கு ஆண்டு காலம் வகுப்பு படிப்பும் ஓராண்டு காலம் ரெசிடென்சி படிப்பும் உண்டு பயிற்சியும் உண்டு.
Table of Contents
கல்வித்தகுதி
பிளஸ் டூ தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை படித்திருக்க வேண்டும், அதில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
வேலை வாய்ப்புகள்
- பிடிஎஸ் பட்டப்படிப்பை முடித்தவர்கள் பல் மருத்துவர்களாக பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் அரசு மருத்துவமனைகளிலும் பணிபுரியலாம்.
- சொந்தமாக பல் மருத்துவமனை ஆரம்பிக்கலாம்.
Dental Colleges in Tamilnadu
- Rajah Muthiah Dental College and Hospital
- SRM Dental College, Kattankulathur
- Sathyabama University Dental College and Hospital, Chennai
- SRM Dental College, Ramapuram
- Saveetha Dental College, Chennai
- Sri Ramachandra Dental College and Hospital, Chennai
- Meenakshi Ammal Dental College and Hospital, Maduravoyal
- Thai Moogambigai Dental College and Hospital, Chennai
- Sree Balaji Dental College and Hospital, Pallikaranai
Dental Colleges in Pondicherry
- Mahatma Gandhi Post Graduate Institute of Dental Sciences, Pondicherry
- Indira Gandhi Institute of Dental Sciences, Pillaiyarkuppam
- Mahe Institute of Dental Sciences and Hospital, Chalakkara
மேற்படிப்புகள்
பிடி..எஸ் பட்டப்படிப்பை முடித்தவர்கள் பல்மருத்துவ முதுநிலை படிப்பை (Master of Dental Surgery – MDS) படிக்கலாம் மேலும் பல் மருத்துவத்தில் புரோஸ்த்தோடென்டிஸ்ட்ரி, என்டோடென்டிஸ்ட்ரி மற்றும் ஓரல் ஃபேசியல் சர்ஜரி ஆகிய பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெறலாம்.
தமிழக மக்களில் 66 விழுக்காடு மக்கள் பல நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 28 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.