மருத்துவக்கல்வி | Medical Education

கல்வியின் பயன்கள் அடிப்படையில் அறிவியல் பாடங்கள் அனைத்திலும் முதன்மை பெறுவது மருத்துவ கல்வியே ஆகும். அதனால் மருத்துவர்களுக்கு என்று ஒரு சமூக அங்கீகாரம் உள்ளது. காலநேரம் பாராமல் ஒரு ஓய்வையும் நினைக்காமல் அவசர நேரங்களில் முகம் கோணாமல் சேவை செய்வதே நோக்கம் என்ற எண்ணம் உடையவர் மட்டும் பயில வேண்டிய புனித கல்வி மருத்துவம். மனிதநேயம் மிக்கோர் மருத்துவ கல்வி பெறுவதே மகிமை நாட்டில் புதுபுது மருந்துகளும் மருத்துவ முறைகளும் கண்டறியப்படுகின்றன என்றாலும் அவற்றுடன் போட்டி போட்டுக்கொண்டு பாக்டீரியாக்களும், வைரஸ்களால், சூழல் சிதறும் முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகும். தவறான உறவுகளாலும் அறியாமையாலும் நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.Doctors

 

MEDICAL EDUCATION SYSTEM IN TAMILNADU

 

நமது நாட்டில் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லை. மருத்துவமனைகளும் இல்லை. தேவைக்கு அதிகப்படியான மருத்துவர்களை உருவாக்கி அவர்களின் சேவையை நாடு முழுவதும் கிடைக்கச் செய்ய வேண்டும். மருத்துவம் ஒரு சேவை மருத்துவராக விரும்புகின்றவர்களுக்கு இளகிய மனம் தேவை இறைவனுக்கு அடுத்ததாக மருத்துவர்களையே மக்கள் கடவுளாக காண்கின்றனர். மருத்துவர்கள் அணியும் வெள்ளை கோர்ட் போல அவர்களது உள்ளமும் வெள்ளையாக இருக்க வேண்டும்.

மருத்துவக்கல்லூரிகள் பொதுவாக குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டுமே உள்ளன. உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டபடி 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் என்ற விதிக்க ஏற்ப மருத்துவர்களை பெருமளவும் தரம் உடனும் உற்பத்தி செய்திட வேண்டும்.

Directorate of Medical Education PDF

Govt Medical Collage in Tamilnadu

தமிழகத்தில் மொத்தம் 14 அரசு மருத்துவக் கல்லூரிகள் கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.

 1. Madras Medical College, Park Town, Chennai
 2. Kilpuk Medical College, Kilpuk, Chennai
 3. Stanley Medical College, Chennai
 4. Chengalpattu Medical Collage, Chengalpattu
 5. Coimbatore Medical College. Coimbatore
 6. Kanyakumari Government Medical Collage, Kanyakumari
 7. KAP Viswanathan Government Medical College, Trichy
 8. Madurai Medical Collage, Madurai.
 9. Thanjavur Medical Collage, Thanjavur.
 10. Thoothukudi Medical College, Thoothukudi.
 11. Tirunelveli Medical College, Tirunelveli.
 12. Government Mohankumaramangalam Medical College, Salem.
 13. Government Vellore Medical Collage, Vellore
 14. The Institute of Road Transport-perunthurai Medical College, Erode.

Private Medical Colleges in Tamilnadu

 1. Christain Medical College, Vellore.
 2. Rajah Muthiah Medical Collage, Chidambaram.
 3. PSG Institute of Medical Science & Research, Coimbatore.
 4. Sree Balaji Medical College & Hospital, Chennai.
 5. Sri Ramachandra Medical College & Research Insitute, Chennai.
 6. Meenakshi Medical College & Research Institue, Kancheepuram.
 7. Vinayaka Mission’s Kirupananada Variyar Medical Collage, Salem.

ஆக மொத்தம் 22 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1645 மாணவர்கள் சேர்ந்து படிக்க இடவசதி உள்ளன மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் இன்னும் அதிகமாக வேண்டும். மேலும் ஆராய்ச்சிக் என்று தனியாக ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகள்

இந்தியாவில் மொத்தம் 242 மருத்துவ கல்லூரிகள் உள்ளன இவற்றில் 25 ஆயிரம் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் மருத்துவ கல்லூரி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி 1835 இது அரசு சார்பில் அமைந்துள்ளது முதல் தனியார் மருத்துவக் கல்லூரி வேலூரில் 1942 இல் துவங்கப்பட்ட சிஎன்சி ஆகும்.

இரண்டாவது தனியார் மருத்துவக் கல்லூரி மணி பாலிலுள்ள கஸ்தூரிபாய் கல்லூரி 1953 ஆகும் இந்தியாவிலேயே தரத்தில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரி மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் டெல்லியில் உள்ள ஏ எம் எஸ் நிறுவனம் ஆகும் இந்த நிறுவனம் 1956 இல் தொடங்கப்பட்டது.

இக் கல்லூரியை போன்று தரத்திலும் தியாக மனப்பான்மை யான சேவை ஆளும் சிறந்த மருத்துவக் கல்லூரி வேலூரில் அமைந்துள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி ஆகும் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன இது அரசு ஆரம்பித்த கல்லூரி அல்ல பெண் மருத்துவர் இல்லாததால் மகப்பேற்றை கவனிக்க முடியாமல் மரித்துப்போன வேலூரின் மூன்று பெண்களின் மரணத்தால் திகைத்துப்போன ஐடா ஸ்கடர் எனும் அமெரிக்க பெண்மணியின் தியாகத்தால் உருவான கல்லூரியாகும்.

இந்தியாவில் உள்ள 242 மருத்துவக் கல்லூரிகளும் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் அனுமதி பெற்றுள்ளன இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றது.

நல்ல நீரில் சமைப்பது எளிதாகும் எல்லாம் விரைவில் விலகும் சுவை சிறப்பும் இருக்கும் பயன்களும் மிகும் அதுபோலதான் நல்ல கல்லூரியில் படித்தால் சிறந்த மருத்துவர் ஆகலாம் உங்களை மக்கள் நம்புகின்றார்கள் மனிதநேயம் கொள்ளுங்கள்.

ALL THE BEST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here