வெப்பவியல் | Thermodynamics

இரும்பு தேக்கரண்டி ஒன்றை கொதிநீரில் வைக்கவும். என்ன காண்கிறீர்கள்? ஒரு சில நிமிடங்களில் அது பிடிக்க முடியாத அளவு சூடாகும். இப்போது என்ன நடந்தது போது நீரானது தனது வெப்பநிலை தேக்கரண்டிக்கு கொடுத்துள்ளது. பனிக்கட்டி தொடும் போது குளிர்ச்சியாக உணர்கின்றோம். இப்போது நமது உடலில் இருந்து வெப்பம் பணிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளுக்கு மாற்றப்பட்டதும் சூடான அல்லது குளிர்ச்சியான உணர்வு தரும் ஆற்றல் வெப்பம் எனப்படும்.

வெப்பம் மூலங்கள்:

சூரியன்:

சூரியன் ஒளி தருகின்றது. அதிகப் ஆற்றலைத் தருகின்றதா?

சிறு உலோகத் துண்டு ஒன்றை சூரிய ஒளியில் வைக்கவும். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அதை தொட்டுப் பார்ப்போம் ஏதாவது மாற்றத்தை உணர்கிறீர்களா? ஆம் அது சூடாக இருப்பதை உணர முடிகிறது.

சூரிய ஒளியில் சிறிது நேரம் நில்லுங்கள் உங்களது தலையைத் தொட்டுப் பாருங்கள் வெப்பத்தை உணர்கிறீர்களா?

இவைகளிலிருந்து சூரிய ஒளியைத் தவிர வெப்ப ஆற்றலை தருகின்றன என்பதை அறியலாம்.

எரிதல்:

நிலக்கரி மன்னனை ஆகியவை எரிந்து வெப்ப ஆற்றலைத் தருகின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்து, நிலத்தில் புதையுண்டு விலங்குகள் தாவரங்களிலிருந்து பெறப்படுவதால் இவை புதைபடிவ எரிபொருள்கள் எனப்படும்.

உராய்வு:

குளிர்காலத்தில் சுற்றுப்புறம் குளிர்ச்சியாக இருப்பதை உணர்கின்றோம். நாம் நமது கைகளை தேய்க்கும்போது வெப்பமடைவதை உணர்கின்றோம். வேகமாக தேய்க்கும்போது அதிகமாக வெப்பம் அடைவதை உணர்கின்றோம். இங்கு இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தேக்கப்படும் போது உராய்வின் காரணமாக வெப்பம் தோன்றுகின்றது.

ஆதிமனிதன் உறவைப் பயன்படுத்தி நெருப்புப் பொறியை உருவாக்கினான். சில சமயங்களில் இரு கற்களை ஒன்றுடன் ஒன்று தேய்த்து நெருப்பை உருவாக்கினான்.

மின்னோட்டம்:

மின்னோட்டம் ஆனது கடத்தியின் வழியாக செல்லும் பொழுது வெப்ப ஆற்றல் உருவாகின்றது. நீர் சூடேற்றி இஸ்திரி பெட்டி மின் திரவ சூடு ஏற்றி போன்றவை இந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

வெப்பம் மற்றும் வெப்பநிலை:

வெப்ப ஆற்றல் கண்ணுக்கு புலனாகாது. ஆனால் அதனை உணர முடியும்.

தொட்டுப்பார்த்து உணர்வதன் மூலம் பொருள் ஒன்று பெற்றுள்ள வெப்பநிலை சரியாக கணக்கிட இயலாது. வெப்ப ஆற்றலை அளவிட நாம் வெப்பநிலை என்ற அளவை பயன்படுத்துகின்றோம்.

பொருள் ஒன்று எவ்வளவு சூடாக உள்ளது அல்லது எவ்வளவு குளிர்ச்சியாக உள்ளது என்பதை அளவிடுவது வெப்பநிலை ஆகும்.

வெப்பநிலைமானி:

சூடாக உள்ளது அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்ற உணர்வு எதனுடன் ஒப்பிடுகிறோம் என்பதை சார்ந்தது. ஆகையால் வெப்பநிலையை அளவிட வெப்பநிலைமானி என்ற கருவியை பயன்படுத்துகின்றோம்.

அனேகமாக எல்லா தொலைக்காட்சி நிலையங்களிலும் அவற்றின் செய்திகள் ஒளிபரப்பின் முடிவில். முக்கிய நகரங்களில் அன்று பதிவான மிக அதிக மற்றும் மிக குறைந்த வெப்பநிலையை குறிப்பிடுகிறார்கள்.

ஒருசில நிலையங்களில் செல்சியஸ் என்ற சொல்லையும், வேறு சில நிலையங்களில் ஃபாரன்கீட் என்ற சொல்லையும் பயன்படுத்துகிறார்கள். இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்ன வெப்பநிலையை குறிப்பிட்டு செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் என்ற இரு அழகுகளையும் பயன்படுத்தலாம். வெப்பநிலையில் இருவிதமான அளவிடும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

  • சென்டிகிரேடு அல்லது செல்சியஸ் அளவீட்டு முறை.
  • ஃபாரன்ஹீட் அளவீட்டு முறை.

வெப்பநிலைமானி யில் இரு திட்ட அளவீடுகளின் அடிப்படையில் அளவுகள் குறிக்கப்படுகின்றன. இதில் ஒன்று கீழ் திட்ட அளவிடு என்றும் மற்றொன்று மேல் திட்ட அளவிடு என்றும் கூறப்படும். இவைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி சம பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பக்கமும் ஒரு டிகிரி என்று அழைக்கப்படும்.

வெப்பநிலையை அளவிடுதல்:

ஆய்வக வெப்பநிலைமானி:

இது கெட்டியான கண்ணாடி குழாய் ஆல் சூழப்பட்ட மிகச் சிறிய துளையை உடைய குழாய் ஆகும். ஒரு முனையில் உருளை வடிவில் குமிழ் காணப்படும். குமிழும் சிறிய துளை குழாயும் ஒரு பகுதியும் பாதரசத்தால் மூடப்பட்டிருக்கும். இதில் அளவிடுகள் -10 டிகிரி செல்சியஸ் முதல் 110 டிகிரி செல்சியஸ் வரை வைக்கப்படும். பாதரசம் சூடாகி விரிவடையும் எனவே குழாயினுள் பாதரச மட்டம் உயரும் குழாயினுள் உள்ள பாதரசத்தின் அளவு வெப்ப நிலையைத் தரும்.

ஆய்வக வெப்பநிலைமானி:

உங்களுக்கு காய்ச்சல் உள்ள போது மருத்துவர்களிடம் சென்று இருப்பீர்கள். மருத்துவர் செய்த முதல் வேலை உங்களது உடல் வெப்பநிலையை கண்டறிந்ததாக தான் இருக்கும். இதற்காக அவர் மருத்துவ வெப்பநிலைமானி பயன்படுத்தியிருப்பார். இதன் அமைப்பை அறிந்து கொள்வோமா?

மிக சிறிய துளை உடைய ஒரு கண்ணாடி குழாயை சுற்றி கெட்டியான கண்ணாடி குழாய் இருக்கும். ஒரு முனையில் உருளை வடிவில் காணப்படும் சிறுதுளை குழாயின் ஒரு பகுதியும் பாதரசத்தில் நிரப்பப்பட்டிருக்கும். குழாயில் உள்ள காற்று நீக்கப்பட்ட பிறகு மறுமுனை மூடப்பட்டிருக்கும். குறுக்கு சற்று மேல் ஒரு சிறு வளைவு காணப்படும். இது விரிவடைந்த பாதரசம் மீண்டும் உடலுக்குள் செல்லாமல் தடுக்க உதவும்.

இதில் 32 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை விடப்பட்டிருக்கும் பாதரசத்தின் அளவு நோயாளியின் வெப்பத்தை தரும் மனிதன் உடல் வெப்பநிலையை காண மட்டுமே இது பயன்படுத்தப்படும். மனிதனின் சராசரி உடல் வெப்பநிலையை காண மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது.

மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை 36.9 டிகிரி செல்சியஸ் அல்லது 98.4 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இது மருத்துவ வெப்பநிலைமானி அம்புக்குறி காட்டப்பட்டிருக்கும். பாரன்ஹீட் அளவீடுகள் குறைக்கப்பட்ட மருத்துவ வெப்பநிலைமானிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. செல்சியஸ் மற்றும் ஃபாரன்ஹீட் அளவீடுகள் வெப்பநிலைமானி நடைமுறையில் உள்ளன.

தற்போது டிஜிட்டல் வெப்பநிலை மாற்றங்களை கொண்டு வெப்பநிலை அளவிடப்படுகிறது. இது கண்ணாடி பாதரசம் இல்லாத ஒரு மின்னணு அமைப்பு ஆகும். இது எளிதில் உடையாது பயன்படுத்துவது பாதுகாப்பானது நோயாளியின் கையில் அடியிலோ அல்லது வைத்த ஒரு நிமிடத்திற்கு பிறகு சிறு சப்தங்களை ஏற்படுத்தும். அது வெப்பநிலையின் அளவை நேரடியாக எண்களில் காட்டும்.

நன்றி!
மேலும் தகவலுக்கு கமெண்ட் செய்யவும்

 

Leave a Comment