கணினிப்பொறியியல் | Computer Engineering Course

கணினிக் கல்வி மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பம்:

+2 வில் கணினி அறிவியல் பாடம் எடுத்துப் படிக்கும் மாணவர்களாலும் கம்ப்யூட்டர் படிப்புகளில் ஆர்வமுள்ள பெரும்பாலான மாணவர்களாலும் தேர்ந்தெடுக்கும் படிப்பு பி.எஸ்சி . , கணினி அறிவியல் , கம்ப்யூட்டர் மற்றும் சாப்ட்வேர் , ஹார்டுவேர் ஆகியவற்றின் அடிப்படை விவரங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன . மேற்படிப்பு எம்.எஸ்சி . , கம்ப்யூட்டர் , எம்.சி.ஏ. , பி . ஜி . டிப்ளமோ படிப்புகள் மேலும் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளையும் படிக்கலாம் . கணினி இந்த உலகை முற்றிலும் மாற்றிவிட்டது.

வேலை வாய்ப்பு :

1. கணினிக் கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன மற்ற துறைகளைவிட இந்த துறையில் படித்தவர் அதிக வருமானம் பெறுகின்றனர் .

2. இந்தப் படிப்பை படித்தவர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு உடனடியாக கிடைக்கின்றது.

3. அரசு , தனியார்துறை , சர்வதேச நிறுவனங்கள் , வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் , தொலைத்தொடர்பு நிறுவனங்கள் , கல்லூரிகள் , பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற அனைத்திலும் இக்கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது .

கணினியில் பட்டப்படிப்புகளும் படிப்பின் விவரங்களும்

1. கணினி அறிவியல் ( B.Sc. , Computer Science )

i ) இப்படிப்பை முடித்தவுடன் அரசு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றலாம் .

ii ) கணினியில் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்களாக, பி.பி.ஓ. ( ( BPO Business Process Outsourcing ) நிறுவனங்களில் வேலை செய்யலாம்.

2. கணினி பராமரிப்பு மற்றும் வலைத்தொடர்பு ( B.Sc. , Computer System Maintenances Network )

மென்பொருள் நிறுவனங்களில் பெருமளவு கணினிகள் உள்ளன இவற்றை பாதுகாப்பதும் , வன்பொருள் மற்றும் மென்பொருட்களைப் பராமரிப்பதும் , சரி செய்வதும் அவசியம் ஆகும் . அவைகளை கணினி பராமரிப்பு மற்றும் வலைத்தொடர்புப் படிப்புப் பற்றியும் கற்றுத் தருகிறது .

வேலைவாய்ப்புகள் :

i ) இப்படிப்பை முடித்தவர்கள் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களிலும் , செய்யலாம் . விற்பனைக் கூடங்களிலும் வேலை

ii ) சிஸ்டம் என்ஜினியர் நெட்வொர்க்கிங் என்ஜினியா போன்ற பணிகளில் சேரலாம் .

3. தகவல் அமைப்பு மேலாண்மை ( B.Sc .. Information System Management ) தகவல்களைத் திரட்டுவது , பாதுகாப்பது மற்றும் மேலாண்மை செய்வது போன்றவைகளை இப்படிப்பில் சுற்றுக் கொள்ளலாம் வேலைவாய்ப்புகள் இப்படிப்பை முடித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன .

4. கணினித் தகவல் தொழில்நுட்பம் ( B.Sc. Information Technology )

கணினித் தகவல் தொழில் நுட்பக் கல்வியானது , கணினி அறிவியல் , இயந்திரம் , தொலைத்தொடர்பு ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது . கணினி , செல்போன்கள் , இன்டர்நெட் சேவை போன்றவை தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தால் நேரடிப் பயனடைந்து வருகின்றன

வேலைவாய்ப்புகள்:

இப்படிப்பை முடித்தவர்களுக்கு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் , தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் இன்டர்நெட் சேவை அமைப்புகள் போன்றவற்றில் வேலைவாய்ப்பு அதிகமுள்ளன .

Computer Engineering Course

 1. B.Sc. Applied Science ( Computer Technology )
 2. B.Sc. , Applied Science ( Information Technology )
 3. B.Sc. ( Computer Application ) 4. B.Com. , ( Computer Application )
 4. BISM ( Information Science & Management )
 5. B.Sc. , Software System

குறிப்பிட்டக் கல்வி நிறுவனங்கள் கீழ்க்காணும் கம்பயூட்டர் படிப்புகளை +2 வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு , ஐந்தாண்டுப் படிப்பாகக் கற்றுத் தருகின்றன.

Master Of Computer Engineering Course

 1. M.Sc., ( Software Engineering )
 2. M.Sc., ( Information Technology )
 3. MSc, ( Computer Technology )
 4. M.Sc. ( Multimedia Technology )
 5. M.Sc., ( Certificate Course in Web Services )
 6. M.Sc., I Software Science )

Leave a Comment