Football Important Match Tips Tamil

தனியுதை (Free kick)

தனியுதை இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.

(அ) நேர்முகத் தனியுதை (Direct) இதனால் குற்றம் செய்த குழுவுக்கு எதிராக, பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெறலாம்.

(ஆ) மறைமுகத் தனியுதை (Indirect) இதனால் பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியாது. ஆனால், பந்து இலக்கினுள் நுழைவதற்கு முன்னர், வேறொரு ‘ஆட்டக்காரர் அப்பந்தைத் தொட்டோ அல்லது விளையாடியோ இருக்க வேண்டும்.

தனியுதை எடுக்கும் முறை:

நேர்முக அல்லது மறைமுகத் தனியுதை எடுக்கப்படும் பொழுது, எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும், பந்தில் இருந்து 9.15 மீட்டர் அப்பால் நிற்க வேண்டும். ஆனால், அவர்கள் இலக்குக் கம்பங்களுக்கு இடையேயுள்ள தங்களது கடைக்கோட்டின் மேல் நின்று கொண்டிருந்தால், 9.15 மீட்டர் தூர விதியைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எதிர்க்குழுவில் உள்ள ஒருவர், தனி உதை எடுக்கு முன் 9.15 மீட்டர் உள்ளாக அருகில் வந்தால், தனி உதை எடுப்பதைத் தாமதமாக்கி, வந்த ஆட்டக்காரரை அப்பால் போகச் செய்து ஆட்டத்தை நடுவர் தொடங்கி வைப்பார். எதிரணியினர் 9.15 மீட்டருக்குள் இடைவெளிவிட்டு நிற்கத் தவறினால் அல்லது, உதைக்கும்போது இடையூறு செய்தால் மீண்டும் தனியுதை அந்த அணிக்கே வழங்கப்படும்.

தனியுதையை தாமதப்படுத்துவதற்காக, போகச் சொன்ன பிறகும் போகாமல் இருப்பவருக்கு பண்பற்ற நடத்தைக்காக, கடுமையான தண்டனை தரலாம்.

உதைக்கப்படும் பந்து தனது சுற்றளவு முழுவதையும் உருண்டு கடந்தால் ஒழிய அது ஆட்டத்தில் ஆடப்படும் தகுதியைப் பெறாது. இன்னும், தனியுதை எடுக்கப்படுவதற்கு அதனை, பந்து அசையாத நிலைப்பந்தாக இருக்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர் பந்தை தொட்டோ அல்லது விளையாடு முன்னர், உதைத்த ஆட்டக்காரரே இரண்டாம் முறையாக மீண்டும் தொட்டு விளையாடக் கூடாது.

ஒறுநிலைப் பரப்பில் இருந்து தனியுதை எடுக்கும் வாய்ப்புப் பெற்றத் தடுக்கும் குழுவினர்” அந்தப் பரப்பிற்கு வெளியே பந்து செல்லுமாறு உதைத்தாட வேண்டும். அவ்வாறின்றி, இலக்குக் காவலர் அப்பந்தைப் பெறுமாறு உதைத்து, அவர் பந்தை எத்தி ஆடுகளத்தினுள் இடச் செய்வது தவறான முறையாகும். இம்முறைப் பின்பற்றப்பட்டால், தனியுதை மீண்டும் எடுக்கப்பட வேண்டும்.

தண்டனை: மற்ற ஆட்டக்காரர் தொட்டோ அல்லது விளையாடவோ செய்யாத பந்தை, உதைத்தவரே மீண்டும் ஆடினால், தவறு நடந்த இடத்தில் வைத்து மறைமுகத் தனியுதை எடுக்கும் வாய்ப்பை எதிர்க் குழுவினர் பெறுவர்.

ஒறுநிலை உதை (Penalty kick)

ஒறுநிலைப் புள்ளியில் இருந்தே (Penalty – kick) ஒறுநிலை உதை எடுக்கப்படும். ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, பந்தை உதைக்கும் ஆட்டக்காரர், அதைத் தடுக்கின்ற இலக்குக் காவலர், இவர்கள் இருவரையுந் தவிர, மற்ற ஆட்டக்காரர்கள் எல்லோரும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே, குறைந்தது ஒறுநிலைப் புள்ளியில் இருந்து 9.15 மீட்டர் அப்பால் (ஆடு களத்தினுள்) நிற்க வேண்டும்.

பந்து எத்தப்படும்வரை, இலக்குக் கம்பங்களுக்கிடையே கடைக்கோட்டின் மேல் நின்று கொண்டிருக்கும் இலக்குக் காவலன், தன்னுடைய கால்களை பக்கவாட்டில் அசைக்கலாம். உதைக்கும் ஆட்டக்காரர் முன்புறம் (Forward) நோக்கியே பந்தை உதைக்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர் தொட்டோ அல்லது விளையாடாத பந்தைத் தானே இரண்டாம் முறையாக ஆடக் கூடாது.

உதைக்கப்பட்டப் பந்து அதன் சுற்றளவு முழுவதையும் உருண்டு கடந்தால்தான், அது ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். இவ்வுதையில், நேராகவே பந்தை இலக்கினுள் உதைத்து வெற்றி எண் பெறலாம். இடைவேளை அல்லது முழு நேரமும் முடிவு பெறும் நேரத்தில். ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது, இலக்குக் காவலனைப் பந்து தொட்டு இரு கம்பங்களுக்கு இடையே கடந்து சென்றுவிட்டதென்றால், அது வெற்றி எண் என்றே கருதப்படும்.

தேவையானால், ஒறுநிலை உதையை எடுப்பதற்காக ஆட்ட நேரத்துடன் இன்னும் சிறிது நேரம் சேர்த்துக் கொள்ளலாம்.

தண்டனை:

(அ) தடுக்கும் குழுவினர் இந்த விதியை மீறி நடந்தால், வெற்றி எண் கிடைக்காவிட்டாலும் மீண்டும் ஒருமுறை ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பு எதிராளிக்குக் கிடைக்கும்.

(ஆ) தாக்கும் குழுவினர் (உதைப்பவரைத் தவிர) இந்த விதியை மீறி நடந்தால், வெற்றி எண் கிடைத்திருந்தாலும், ஒறுநிலை உதை மீண்டும் எடுக்கப்படும்.

(இ) உதைக்கும் ஆட்டக்காரர் இந்த விதியை மீறி நடந்தால், தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து மறைமுகத் தனியுதை எடுக்கும் வாய்ப்பைத் தடுக்கும் குழுவினர் பெறுவர்.

உள்ளெறிதல் (Throw-in)

உ தரைமேல் உருண்டோ அல்லது மேலெழுந்தவாறோ (In the air) பக்கக் கோட்டைக் கடந்து பந்து முழுவதும் சென்றால், கடைசியாகப் பந்தைத் தொட்டாடிய குழுவினரின் எதிராளிகள் பந்தை உள்ளெறியும் வாய்ப்பைப் பெறுவர். பக்கக் கோட்டைக் கடந்து பந்து சென்ற இடத்தில் இருந்துதான் உள்ளெறிய வேண்டும்.

பந்தை உள்ளெறியும் சமயத்தில் ஆடுகளத்தை நோக்கியிருந்த படியே (ஏதாவது ஒவ்வொரு காலின் பகுதி பக்கக் கோட்டைத் தொட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது கோட்டுக்கு வெளியேயும் இருக்கலாம்.) எறிபவர் உள்ளெறிய வேண்டும். பந்தை எறியும் பொழுது, இரு கைகளையும் உபயோகித்துத் தலைக்கு மேலாக வைத்தே எறிய வேண்டும். பந்தை உள்ளெறிந்த ஆட்டக்காரரே பிறர் பந்தைத் தொட்டு விளையாடும் முன் இரண்டாம் முறையாகத் தானே ஆடக்கூடாது.

உள்ளெறிதலால், நேராகப் பந்தை இலக்கினுள் எறிந்து வெற்றி எண் பெற முடியாது.

தண்டனை: விதிகளுக்குப் புறம்பாக உள்ளெறிதலைச் செய்தால், எறிந்தவருக்கு எதிராக உள்ள குழுவில் உள்ள மற்ற ஒருவருக்கு உள்ளெறியும் வாய்ப்பு வழங்கப்படும்.

மற்ற ஆட்டக்காரர்கள் பந்தை விளையாடும் முன்னர் உள்ளெறிந்தவரே, இரண்டாவது முறையாக ஆடினால், அந்தத்

தவறு நடந்த இடத்தில் இருந்து முறைமுகத் தனி உதை எடுக்கும் வாய்ப்பை எதிர்க்குழுவினர் பெறுவர்.

குறியுதை (Goal-kick)

தாக்கும் குழுவினரால் கடைசியாக விளையாடப்பட்ட பந்து, இலக்குக் கம்பங்களுக்கு இடையில் போகாமல் உருண்டோ அல்லது மேலெழுந்தவாறோ கடைக்கோட்டிற்கு வெளியே கடந்து சென்றால், மறைமுகத் தனியுதையைத் தடுக்கும் குழுவினர் பெற்று, பந்து சென்ற பக்கமாக உள்ள இலக்குப் பரப்பில் (Goal area) பந்தை வைத்து உதைத்து, (Goal kick) ஆட்டத்தைத் தொடங்குவர்.

 

இலக்குப் பரப்பினுள் வைக்கப்பட்டுள்ள பந்து, ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே செல்லுமாறு உதைக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒறுநிலைப் பரப்புக்கு வெளியே பந்து இல்லாவிட்டால், மறுமுறையும் குறியுதைக்கு வாய்ப்பு அளிக்கப்படும். மற்றவர் பந்தைத் தொட்டு விளையாடுவதற்கு முன், உதைத்தவரே இரண்டாம் முறையும் விளையாடக் கூடாது. க்

குறியுதையில் பந்தை உதைத்து, இலக்குக் காவலனுக்குத் தள்ளிவிட்டு, அவன் அதைப் பிடித்து எத்தி ஆட்டத்தில் இடுவது கூடாது. குறியுதையால் நேராக பந்தை இலக்கினுள் உதைத்து வெற்றி ‘ எண் பெறவும் முடியாது. குறியுதை எடுக்கப்படும் பொழுது தாக்கும் குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும் பந்து உதைக்கப்படும் வரை, ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நின்று கொண்டிருக்க வேண்டும்.

தண்டனை: குறியுதை எடுத்த ஆட்டக்காரர், ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே பந்தை மற்ற ஆட்டக்காரர்கள் உதைத்து விளையாடுவதற்கு முன்னே இரண்டாவது தடவையாகத் தானே ஆடும் தவறைச் செய்தால், தவறு நிகழ்ந்த இடத்தில் இருந்து மறைமுகத் தனியுதை எடுக்கும் வாய்ப்பை எதிர்க்குழுவினர் பெறுவர்.

முனையுதை (Corner-kick)

தடுக்கும் குழுவினரால் கடைசியாக விளையாடப்பட்ட பந்து, இலக்குக் கம்பங்களுக்கு இடையில் போகாமல், தரையில் உருண்டோ அல்லது மேலெழுந்தவாறோ கடைக்கோட்டிற்கு வெளியே கடந்து சென்றால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கி வைக்க முனையுதை (corner-kick) பயன்படுகிறது.

 

பந்து கடந்து சென்ற பக்கத்துக்கு அருகில் உள்ள முனைக் கொடிக் கம்பம் நாட்டப் பெற்றிருக்கும் கால் பந்தின் பரப்பில், பந்தை வைத்துத் தாக்கும் குழுவில் உள்ள ஒருவர் உதைக்க, ஆட்டம் தொடங்கும். முனை உதை எடுக்கும் பொழுது, முனைக் கொடிக் கம்பத்தை அகற்றக்கூடாது. முனை உதை எடுக்கும் குழுவுக்கு எதிர்க்குழுவினர், பந்தை உதைக்கப்பட்டு அதன் சுற்றளவு தூரம் உருளும் வரை, 10 கெசத் தூரத்திற்கு அப்பாலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். மற்ற ஆட்டக்காரர்கள் பந்தைத் தொட்டு விளையாடுவதற்கு முன்னரே, முனை உதையை உதைத்தவர் மீண்டும் ஆடக்கூடாது.

முனை உதையால் பந்தை நேரே இலக்கினுள் செலுத்தி வெற்றி எண் பெற முடியும்.

தண்டனை: இந்த விதியை மீறி நடந்தால், தவறு செய்தவரின் எதிர்க்குழுவினருக்கு தவறு நடந்த இடத்தில் பந்தை வைத்து மறைமுகத் தனியுதை செய்யும் வாய்ப்பு அளிக்கப்படும்.

Leave a Comment