அதிக மதிப்புள்ள படிப்புகளில் முதன்மையானது மருத்துவ (MBBS) படிப்பாகும் அதனால் தான் அறிவியல் பாடங்களை படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் ஆசை மருத்துவப் படிப்பின் மீது திரும்பி உள்ளது.
ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை படிப்பில் இளநிலை பட்டம் ( MBBS– Bachelor of Medicine and Bachelor of Surgery) பெற்றிட வேண்டும். இப்படிப்பின் காலம் ஐந்தரை ஆண்டு ஆகும் இதில் நாலரை ஆண்டு வகுப்பறை படமும் ஒரு வருடம் செய்முறை பயிற்சியும் ஆகும்.
கல்வித்தகுதி
மருத்துவ படிப்பில் சேர பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலை வாய்ப்புகள்
- மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்ததும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு செய்துவிட்டு மருத்துவராக பணியாற்றலாம்.
- தனியார் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மருத்துவராக வேலைக்கு சேரலாம்.
- சுயமாகவும் கிளினிக் நடத்தலாம்.
- அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணி புரியலாம்.
மேற்படிப்புகள்
மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க விரும்பினால் எம்.டி (MD) மற்றும் எம்.எஸ் (MS) எம்.சி.ஹெச் (M.Ch) போன்ற உயர் படிப்புகள் உள்ளன இவற்றின் படிப்பு காலம் மூன்று ஆண்டு ஆகும். இவற்றைப் படிப்பதன் மூலம் மருத்துவ நிபுணர்களாக விளங்கலாம் உச்சநிலை சிறப்பு கல்வியாக டி.எம் (DM) என்ற பட்டப் படிப்பினையும் மேற்கொள்ளலாம் இவற்றின் படிப்பிற்கு மூன்று ஆண்டு ஆகும். மேலும் ஆர்தோபேடிக்ஸ் ரேயா லாஜிக்கல் தெரபி ஆப்தல்மொலஜி பப்ளிக் ஹெல்த் போன்ற டிப்ளமோ படிப்புகளையும் படிக்கலாம்.