Necessary for football players in Tamil

பந்து (The Ball)

பந்து உருண்டை வடிவமுள்ளதாகவே இருக்க வேண்டும். ஆடுவோருக்கு அபாயம் விளைவிக்கும் மற்ற எந்தப் பொருள் களாலும் செய்யப்படாமல், பந்தின் மேல் பாகம் தோலால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பந்தின் கனம்: 16 அவுன்சுக்கு மிகாமல் (453 கிராம்) 14 அவுன்சுக்குக் (396 கிராம்) குறையாமல் – ஆட்டம் தொடங்குவதற்கு முன் இருக்க வேண்டும். பந்தின் சுற்றளவு 28 அங்குலத்திற்கு (0.71 மீட்டர்) மிகாமலும் 27 அங்குலத்திற்கு (0.68 மீட்டர்) குறையாமலும், இருக்க வேண்டும்.

 

ஆட்ட நேரத்தில் நடுவருடைய அனுமதியின்றி வேறு பந்து மாற்றப்படக் கூடாது.

பந்து ஆட்ட நேரத்தில் காற்றிரங்கி விட்டாலோ அல்லது வெடித்துவிட்டாலோ, அதேபோல வேறொரு பந்தை அதே இடத்தில் மேலெறிந்து, கீழே விழச் செய்து (Drop), ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

விளையாடும் ஆட்டக்காரரின் எண்ணிக்கை (Players)

ஆட்டம் இரு குழுக்களால் விளையாடப் பெறும். ஒவ்வொரு குழுவிலும் 11 பேர் உண்டு. அவர்களில் ஒருவர் குழுவுக்குக் காவலராக இருப்பார். ஆட்ட நேரத்தில் மற்ற ஆட்டக்காரர்களில் ஒருவரை, இலக்குக் காவலராக மாற்றலாம். ஆனால், அந்த மாற்றத்தைச் செய்வதற்கு முன், நடுவரிடம் அறிவித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்,

நட்புப் போட்டியில் ஆடுகின்ற ஒவ்வொரு குழுவிற்கும் 3 மாற்றாட்டக்காரர்களை மாற்றிக் கொள்ள அனுமதி உண்டு.

ஆட்ட நேரத்திற்கு முன் நடுவரிடம் 5 பேர்களுக்குக் குறையாமல் மாற்றாட்டக்காரர்களின் பெயர்களைக் கொடுத்துவிட வேண்டும். அவர்களில் மூவர் மாற்றாட்டக்காரர்களாக களம் இறங்கலாம்.

 

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு ஆட்டக்காரர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டால், முன்பு பெயருள்ள மாற்றாட்டக்காரர்களில் ஒருவர் அவருக்குப் பதிலாக ஆட அனுமதிக்கப்படுவார். வேறொரு மாற்றாட்டக்காரரை உள்ளே வரவழைப்பதற்காக ஆட்ட நேரத்தைத் தாமதப்படுத்தக் கூடாது.

வெளியேற்றப்பட்ட அந்த ஆட்டக்காரர் அந்த ஆட்டத்தில் மீண்டும் வந்து பங்கு பெற்று ஆட முடியாது.

மாற்று ஆட்டக்காரர் யார் என்பதை நடுவருக்கு முன்பே அறிவிக்க வேண்டும். பந்து நிலைப் பந்தாக (Dead ball) மாறியவுடன்தான், மாற்றாட்டக்காரரை உள்ளே வர அனுமதிக்க வேண்டும். அதுவும் நடுவரின் அனுமதிக்குப் பிறகே அவர் உள்ளே வரவேண்டும்.

தண்டனை: நடுவரிடம் அனுமதி பெறாமல் ஆட்ட நேரத்தில் தன்னை இலக்குக் காவலனாக மாற்றிக் கொண்ட ஒரு ஆட்டக்காரர், ஒறுநிலைப் பரப்பினுள்ளே பந்தைப் பிடித்தால், அதற்குத் தண்டனையாக எதிர்க்குழு ஒறுநிலை உதையைப் பெறும்.

(காயமுற்ற நேரந்தவிர) ஆட்ட நேரத்தில் நடுவரின் அனுமதி யின்றி யாராவது ஒருவர் ஆடும் களத்தை விட்டு வெளியே சென்றால், அவர் முறை தவறி நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுவார்.

எந்தக் காரணத்தினாலாவது ஒரு ஆட்டக்காரர் போட்டி ஆட்டம் நடக்கும் பொழுது, ஆடுகளத்தை விட்டு வெளியே சென்றால், எந்தப் போட்டியில் கலந்து கொண்டாரோ அந்தப் போட்டி ஆட்டம் (Match) முடியும் வரை மற்றொரு போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது. (1939 மார்ச் குழு அறிக்கை)

விளையாட்டுச் சாதனங்கள் (Equipment’s)

பிற ஆட்டக்காரர்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளையும் ஒரு ஆட்டக்காரர் அணிந்திருக்கக் கூடாது, கீழே கூறியுள்ள முறைகளில் அவரது ஆடப்பயன்படும் காலணி (Boot) அமைந்திருக்க வேண்டும்.

காலணியில் உள்ள அடித்தட்டும் (Bar) குமிழ்களும் (Studs) தோலினாலோ அல்லது மென்மையான ரப்பராலோ செய்யப் பட்டிருக்க வேண்டும். அதிலே அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகள் நன்றாக உள்ளே செலுத்தப்பட்டிருக்க வேண்டும். அடித் தட்டுகள் தட்டையாகவும் குறுகியதாகவும், அரை அங்குலம் அகலத்திற்குக் குறைவின்றியும் காலணியின் மொத்த அகலம் வரைக்கும் நீண்டு, முனைப்பாகத்தில் வட்டவடிவமான அமைப்புக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

குமிழ்கள் அரை அங்குலத்திற்குக் குறையாத விட்டம் கொண்டு, வட்ட வடிவம் உள்ளதாக இருக்க வேண்டும். அடித்தட்டுக்களையும குமிழ்களையும் இணைந்தாற் போலவே காலணியில் அமைத்துக் கொள்ள விரும்பினாலும், ஆட்டத்திற்குரிய விதிகளுக்கு உட் பட்டிருக்க வேண்டும்.

காலணியின் முன் பகுதியிலும் (பாதம்), பின்பகுதியிலும் (குதிகால் பாகம்) உள்ள குமிழ்கள் அல்லது அடித்தட்டுகள் எல்லாம் முக்கால் அங்குல உயரத்திற்கு மேல் போகக் கூடாது.

திருகும் முறையில் செய்யப்பட்டக் குமிழ்களைத் தவிர, உலோகத்தால் செய்யப்பட்ட குமிழ்கள் தோலால் அல்லது ரப்பரால் மூடப்பட்டிருந்தாலும் அவற்றை அணியக் கூடாது. ஆகவே, விதிகளுக்கு உட்பட்ட காலணிகளை அணிந்தே ஒருவர் ஆட வேண்டும்.

ஒரு ஆட்டக்காரருக்குரிய விளையாட்டுச் சாதனங்கள்

ஒரு கம்பளி சட்டை (Jersey) அல்லது அரைக் கை சட்டை, அரைக்கால் சட்டை, பின்னல் காலுறை (Stocking) காலணிகள் முதலியன. பிற ஆட்டக்காரர்கள் அணியும் வண்ண உடைகளில் இருந்து மாறுபட்ட வண்ணத்தாலான சட்டை ஒன்றை, இலக்குக் காவலன் அணிந்திருக்க வேண்டும்.

காலணிகளுக்குள்ளக் கட்டுப்பாட்டைப் போலவே இன்னும் ஒன்று. செயற்கையான கை, மோதிரங்கள், இடைவார் இவற்றுடன் யாரும் ஆடவே கூடாது.

தண்டனை: இவ்விதியை மீறி களம் புகுந்து ஆட வந்த ஓர் ஆட்டக்காரர். தற்காலிகமாக ஆட்டத்தை விட்டு வெளியேற்றப் படுவார். அவருடைய ஆட உதவும் உதவி சாதனங்களைத் திருத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டு, நடுவரிடம் அவற்றைக் காட்டி அனுமதி பெற்ற பின்னரே ஆடுகளத்தினுள் நுழைய வேண்டும். அதுவும் பந்து விளையாடப்படாத நேரம் பார்த்துத்தான் உள்ளே வர வேண்டும்

Leave a Comment