Self Employment Ideas | சுய வேலைவாய்ப்புத் திட்டம்

படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் சுயதொழில் செய்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பாரதப் பிரதமரின் சுய வேலைவாய்ப்புத் திட்டம்.

இத்திட்டமானது கடந்த 1993 – ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 – ம் தேதியிலிருந்து மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக செயல்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

  • வேலை இல்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கும் படித்த ஆண்களும் பெண்களும் சுயதொழில் செய்ய வேண்டும்.
  • கிராமப்புறங்களில் தொழில் வளம் பெருக வேண்டும்.
  • விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

இத்திட்டத்தின் பயனை அடைய தேவைப்படும் தகுதிகள்

வயது வரம்பு 18 – வயது முதல் 35 – வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர். முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர் மற்றும் பெண்களுக்கு 45 – வயது வரை இருக்கலாம்.

கல்வித் தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி. இத்தகுதி இல்லாதவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஆறு மாதத்திற்குக் குறையாமல் தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வருமானம்

குடும்ப ஆண்டு வருமானம் 40 – ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

வசிப்பிடம்

விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அவர்களது மாவட்டத்தில் தொடர்ச்சியாக வசித்து இருக்க வேண்டும். திருமணமான பெண்கள் கணவர் வசித்து வரும் இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

தகுதியுடைய தொழில்கள்

பொருளாதார ரீதியாக லாபகரமாக இயங்கக்கூடிய அனைத்து தொழில்கள், சேவை, வியாபாரம், வேளாண்மை மற்றும் அதன் சார்புள்ள தொழில்கள், நேரடி விவசாயம், பயிரிடுதல், இத்திட்டத்தில் அடங்காது.

திட்டக் கடன் உதவி

வணிக நடவடிக்கைகளுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாயும், உற்பத்தி செய்யக் கூடிய தொழில் மற்றும் சேவை நடவடிக்கைகளுக்கு அதிகபட்சம் இரண்டு லட்சம் ரூபாயும் கடனாக கிடைக்கும். தகுதி பெற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பங்குதாரர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வரை வங்கிகளின் மூலம் கடனுதவி கிடைக்கும்.

திரும்ப செலுத்தும் கால அளவு

மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டு காலம் வரையிலான அளவில் கடனை திரும்பச் செலுத்தலாம். விடுமுறை காலம் திட்டங்களுக்கேற்றவாறு நிர்ணயிக்கப்படும்.

ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 22.5 சதவீதம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பத்து அல்லது இருபது நாட்கள் பயிற்சியளிக்கப்படும். பயிற்சி காலத்தில் பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும். இப்பயிற்சியில் தொழிலை சிறப்பான முறையில் மேம்படுத்த அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படுகிறது.

சமூகப் பணிகள் சமூக, பொருளாதார, கல்வி, உடல், மனநலம் பேணுதல் உள்பட பல்வேறு துறைகளில் பிறருக்குச் சேவை செய்வது சமூகப் பணிகளாகும். இப்பணிகளிலும் வேலை வாய்ப்புகள் உண்டு.

பல்வேறு சமூகப் பணிகள்

  1. கல்வித்துறையில் சமூகப் பணி ( Educational Social Work )
  2. மருத்துவ மற்றும் மனநல சமூகப் பணி ( Medical and Psychiatric Social Work )
  3. குற்றவியல் மற்றும் சீர்திருத்த சமூகப் பணி ( Criminology and Correctional Social Work )
  4. பணியிலிருப்போர் நலன் மற்றும் தொழில் உறவுகள் மேம்பாடு சார்ந்த சமூகப் பணி ( Labour Welfare and Industrial relation Social Work )
  5. முதியோர் நலம் சார்ந்த சமூகப்பணி ( Gerontological Social Work ) )

கல்வித்தகுதிகள்

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் எம்எஸ்டபிள்யூ ( MSW ) முதுகலைப்பட்டம் படிக்க தகுதி உடையவர் ஆவர் சமூகவியல் ( Sociology ), உளவியல் ( Psychology ), சமூகப் பணி ( Social work ) போன்றவற்றில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இளங்கலைப் பட்டப் படிப்பைப் பயில +2 படித்திருந்தால் போதுமானது. கல்லூரிக்குக் கல்லூரி அனுமதி முறைகள் வேறுபடும்.

சில முக்கிய கல்வி நிறுவனங்கள்

  1. Bangalore University Bangalore – 560 056
  2. Bharathidasan University, Tiruchirappalli – 620 024
  3. Bharathiar University Coimbatore  – 641046
  4. Bishop Heber College Trichy – 620 017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here