The structure and areas of the football field in Tamil

அமைப்பு

ஆடுகளத்தின் அமைப்பு நீண்ட சதுர வடிவமானது. அதன் நீளம் 120 மீட்டருக்கு மேற்படாமலும், 90 மீட்டருக்குக் குறையாமலும், அகலம் 90 மீட்டருக்கு மேற்படாமலும், 45 மீட்டருக்குக் குறையாமலும் (அகில உலகப் போட்டிகளில் பயன்படுத்துகின்ற ஆடுகளத்தின் அளவு நீளம் 110 மீட்டருக்கு மிகாமலும், 100 மீட்டருக்குக் குறையாமலும், அகலம் 75 மீட்டருக்கு மிகாமலும், 64 மீட்டருக்குக் குறையாமலும்) இருக்க வேண்டும்.

அகில உலப் போட்டிகளுக்கான ஆடுகளத்தின் அமைப்பு:

அதிக அளவு 110 மீட்டர் x 75 மீட்டர். குறைந்த அளவு 100 மீட்டர் x 64 மீட்டர்.

அகலப் பகுதியை விட நீளப் பகுதியின் அளவு எப்போதும் குறையவே கூடாது. பொதுவாக நன்றாக அமையக்கூடிய ஒரு ஆடுகளம் அந்தந்த இடத்தின் பரப்பளவைப் பொறுத்தே, ஆடுகளம் சிறப்பாக அமையும்.

ஆடுகளத்தின் பகுதிகளைக் காட்டுகின்ற கோடுகள், பகுதி களைத் தெளிவாகக் காட்டுவனவாக, திருத்தமான முறையில் 5 அங்குலத்திற்கு மேற்படாத அகலம் உள்ளவாறு குறிக்கப்பட வேண்டும். கோடுகளுக்குப் பதிலாக Vவடிவமுள்ள பள்ளம் தோண்டி அடையாளம் செய்யவே கூடாது.

இலக்குக் கம்பங்கள், குறுக்குக் கம்பம் அவைகளின் கனத்திற் கேற்ப, (Dimension) கடைக்கோடுகளின் அகலம் குறிக்கப்பட வேண்டும்.

நீண்ட எல்லைக் கோடுகளைத் தொடுகோடுகள் அல்லது பக்கக் கோடுகள் என்றும், குறைந்த அளவுள்ள எல்லைக் கோடுகளைக் கடைக்கோடுகள் என்றும் கூறுவர். ஒவ்வொரு முனையிலும் (Corner) நிறுத்தப்பட்டிருக்கும் கொடியைத் தாங்கியுள்ள ஒவ்வொரு கம்பமும்,

மழுங்கிய முனை உள்ளதாகவும், 5 அடிக்குக் குறைவில்லாததாகவும் இருக்க வேண்டும்.

ஊ நடுக்கோட்டிற்கு நேரே ஊன்றியுள்ள கம்பம், பக்கக் கோட்டின் மேலே இல்லாமல் 1 கெச தூரத்திற்கு அப்பால் ஊன்றி வைக்கப்பட்டிருக்க வேண்டும். பாதி வழிக்கோடு (Half – Way line) அல்லது நடுக்கோடு ஒன்று ஆடுகளத்தை இரண்டாகப் பிரிக்கப் பயன்படுகின்றது. 9.15 மீட்டர் ஆரமாக உடைய ஒரு வட்டம் ஆடுகளத்தின் மையத்தில் திருத்தமான முறையில் வரைந்து குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறியீடுகளின் பயன்கள் (Markings)

பக்கக் கோடுகள் (Touch Lines):

தொடு கோடுகள் அல்லது பக்கக் கோடுகளில் ஏதாவது ஒன்றில், பந்து முழுவதும் கடந்து வெளியே சென்றால், கடைசியாகப் பந்தை விளையாடிய ஆட்டக்காரரின் எதிர்க்குழுவில் உள்ள ஒருவர், பந்தை உள்ளெறிய (Throw-in) ஆட்டம் தொடங்கும்.

கடைக்கோடுகள் (Goal-Lines):

இலக்குக் கம்பங்களுக்கு இடையே குறுக்கு குச்சிக்குக் கீழே செல்லாமல், தரையோடோ அல்லது மேலெழுந்த நிலையிலோ (in the air) கடைக்கோட்டைத் தாண்டி பந்து முழுதும் கடந்து சென்று விட்டால், கீழ்க்கண்ட இரண்டு முறைகளில் ஆட்டம் தொடங்கும்.

  1. குறியுதை (Goal – Kick): தாக்கும் குழுவினர் (Attacking Side) பந்தைக் கடைசியாகத் தொட்டு விளையாடியிருந்தால், தடுக்கும் குழுவினருக்கு (Defending side) குறியுதை வாய்ப்புக் கிடைக்க, மீண்டும் ஆட்டம் தொடங்கும்.
  2. முனையுதை (Corner-kick): தடுக்கும் குழுவினர் பந்தைக் கடைசியாகத் தொட்டு விளையாடி இருந்தால் தாக்கும் குழுவினருக்கு முனையுதை உதைக்கும் வாய்ப்புக் கிடைக்க, மீண்டும் ஆட்டம் துவங்கும்.

இரு இலக்குக் கம்பங்களுக்கு இடையில், குறுக்குக் கம்பத்திற்குக் கீழே, கடைக்கோட்டைத் தாண்டிப் பந்து கடந்து சென்றால், அடித்தக் குழுவுக்கு, வெற்றி எண் (Goal) கிடைக்கும்.

(இ) நடுக்கோடு அல்லது பாதி வழிக்கோடு (Halfway line):

இக்கோடு ஆடுகளத்தை இரு சரிபாதியாகப் பிரிக்கின்றது. இதனால் ஏற்படும் பயன்கள்:

  1. ஆரம்ப நிலை உதை (Kick-off): ஆரம்பத்தில், நிலையாக வைக்கப்பட்டிருக்கும் பந்தை உதைத்து ஆட்டம் தொடங்கும் வரை, எல்லா ஆட்டக்காரர்களும் அவரவர் பகுதியில்தான் நின்று கொண்டிருக்க வேண்டும்.
  2. அயலிடம் (Off-side): தன்னுடைய பகுதியில் நின்று கொண்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர், எப்பொழுதும் அயலிடம் என்ற தவறுக்கு ஆளாக மாட்டார்.

(ஈ) 10 கெச மைய வட்டமும் 10 கெச ஒறுநிலை வளைவுகளும்:

நேர்முகத் தனி உதை (Direct Free-Kick) அல்லது மறைமுகத் தனி உதை எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவிதமான தனி உதைகளுக்கும் எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் எல்லோரும் 10 கெச தூரத்திற்கு அப்பால் நிற்க வேண்டும்.

அந்த உதையை எடுக்கும் வரை, எல்லோரும் பந்திலிருந்து 10 கெசத்திற்கு அதன் அருகில் வரக்கூடாது என்பதன் நோக்கம். தனியுதையில் எவ்விதத் தலையீடும் இடையீடும் அங்கே நிகழக் கூடாது என்பதற்காகத்தான்.

குறிப்பு: எதிர்க்குழுவினர் எல்லோரும் பந்துக்கு முன்னும் பின்னும் 10 கெசத் தூரத்திற்கு அப்பால் நிற்க வேண்டும் என்பதையே இந்த 10 கெசவிதி வலியுறுத்துகின்றது. ஆனால் இந்த விதி இரண்டு நிலைகளில் மாறுபடுகின்றது.

மாற்றம் : ஒறுநிலை உதையானது (Penalty – Kick) எடுக்கப் படும் பொழுது, உதைக்கும் ஆட்டக்காரர், தடுக்கும் இலக்குக் காவலர் இருவரையும் தவிர பந்து இருக்கும் இடத்திலிருந்து 10 கெசத்திற்கு அப்பால், ஒரு நிலைப்பரப்பிற்கு வெளியே, எல்லோரும் நிற்க வேண்டும் என்பது பொது விதி,

இலக்குக் காவலன் இலக்குக் கம்பங்களுக்கிடையில், கடைக்கோட்டின் மேல்தான் நிற்க வேண்டும். குறியுதை எடுக்கப் படும் பொழுது, எல்லா தாக்கும் ஆட்டக்காரர்களும் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே நிற்க வேண்டும். (இலக்குப் பரப்பின் கோட்டிற்கும், ஒறுநிலைப் பரப்பின் கோட்டிற்கும் இடையில் உள்ள தூரம் 12 கெசங்களாகும்.)

விதிவிலக்கு: ஒறுநிலைப் பரப்பினுள் 10 கெசத்திற்குள்ளாக மறைமுகத் தனியுதை வாய்ப்பு எதிர்க் குழுவினருக்கு கிடைத்தால், தடுக்கும் குழுவினர் எல்லோரும் இலக்குக் கம்பங்களுக்கிடையே உள்ள கடைக்கோட்டின் மேல் நின்று கொண்டிருக்க அனுமதிக்கப் படுவார்கள்.

ஆடுகளப் பகுதிகள் (Areas)

(அ) இலக்குப் பரப்பு (Goal-Area) ஒவ்வொரு இலக்குக் கம்பத்திலிருந்தும் (உள் அளவு) 6 கெச நீளம் கடைக்கோட்டில் எடுத்து, பின் அவ்விடங்களில் இருந்து ஆடுகளத்தினுள் செங்குத்தாக 6 கெச நீளத்திற்கு இரு கோடுகளையும் இழுக்க வேண்டும். அந்த இரு செங்குத்தான கோடுகளை ஒன்றாக, நேராக இணைக்கும் பொழுது (மேற்கூறிய எல்லாக் கோடுகளையும்) வரும் இடைப்பட்ட பகுதியே இலக்குப் பரப்பு எனப்படும்.

பயன்கள்: இந்தப் பரப்பு கீழே காணும் செயல்களுக்காகப் பயன்படுகிறது.

  1. இலக்குக் காவலன் பந்தைப் பிடித்துத் தன் வசம் வைத்திருக்கும் பொழுது (விதியை மீறாது) மெதுவாக இடிக்கப் படலாம். அதாவது, இடிப்பது பந்துடனே சேர்ந்தாற்போல் இருக்க வேண்டும். பந்தைப் பிடிக்காமலும் இந்தப் பரப்பினுள்ளே நின்று கொண்டிருக்கும்வரை, இலக்குக் காவலனுக்கு விதிகளின் துணை என்றுமே உண்டு.
  2. இது குறியுதை (Goal-Kick) எடுக்க வேண்டிய எல்லையைக் கட்டுப்படுத்துகின்றது.

(ஆ) ஒறுநிலைப் பரப்பும், ஒறுநிலை வளைவும் (Penalty Area and Penalty Arc) ஒவ்வொரு இலக்குக் கம்பத்தில் இருந்தும் ஒவ்வொரு பக்கத்திலும் கடைக்கோட்டில் 18 கெச தூரம் தள்ளி, நேராக இழுத்துப் பின் செங்குத்தாக ஆடுகளத்தினுள், 18 கெச தூரம் உள்ள கோடொன்றை இழுக்க வேண்டும். இவ்வாறு இழுக்கப்பட்ட இருகோடுகளின் முனைகளும், ஆடுகளத்தின் உள்ளே கடைக் கோட்டிற்கு இணையாக இணைக்கப்பட வேண்டும். இதற்கு இடையில் ஏற்படுகின்ற பரப்பே ஒறுநிலைப் பரப்பாகும் (படம் காண்க).

இலக்குக் கம்பங்களுக்கு இடைப்பட்டக் கடைக்கோட்டின் மையப் புள்ளியில் இருந்து 12 கெசதூரத்தில் ஆடுகளத்தின் உள்ளே ஒரு ஒறுநிலைப் புள்ளியைக் குறிக்க வேண்டும். அந்த இடமே ஒறுநிலைப் புள்ளி (Penalty kick-mark) எனப்படும். ஒவ்வொரு ஒறுநிலைப் புள்ளியில் இருந்தும் 10 கெச நீள ஆரம் உள்ள வளைவு ஒன்று ஆடுகளத்தின் உள்ளே அதாவது ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே இழுக்கப்பட்டிருப்பதற்கு ஒறுநிலை வளைவு என்று பெயர்.

பயன்கள்:

  1. தவிர்க்கப்பட்ட ஒன்பது குற்றங்களில் (Nine offences) (பகுதி 5-ல் 1-ம் பிரிவு) ஏதாவது ஒன்றை வேண்டுமென்றே தடுக்கும் குழுவினர் (தாக்கும் குழுவினருக்கு) இப்பகுதியில் செய்தால், ஒறுநிலை உதையைத் (Penalty-Kick) தங்களுக்குத் தண்டனையாகப் பெறுவர்.
  2. இலக்குக் காவலன் கைகளினால் பந்தைப் பிடிக்கலாம் என்ற ஒரு எல்லையை, இப்பகுதி நிர்ணயித்துக் காட்டுகிறது.
  3. குறி உதையால் இலக்குப் பரப்பில் இருந்து உதைக்கப்படும் பந்து, மற்றவர்களால் தொட்டு ஆடப்படும் முன், இப்பரப்பிற்கு வெளியே சென்றிருக்க வேண்டும். குறி உதையால் வரும் பந்தைஉதைப்பவரே மறுமுறை ஆடுவதற்கு முன்னதாக, மற்ற ஆட்டக் காரரால் ஆடப்பட வேண்டும்.
  1. ஒறுநிலை உதையானது எடுக்கப்படும் பொழுது, தடுக்கின்ற இலக்குக் காவலனையும் உதைக்கின்ற ஆட்டக்காரரையும் தவிர மற்ற எல்லா ஆட்டக்காரர்களும் இப்பரப்பிற்கு வெளியே நிற்க வேண்டும் என்ற எல்லையைக் காட்டுகிறது.

இன்னும் குறியுதை எடுக்கப்படும் பொழுது தடுக்கும் குழுவினரைத் தவிர மற்றத் தாக்கும் குழுவினர் அனைவரும், இப்பரப்பிற்கு வெளியே நின்று கொண்டிருக்க வேண்டும் என்பதையும் இப்பரப்பு சுட்டிக் காட்டுகின்றது.

ஒறுநிலை வளைவு என்பது, ஒறுநிலைப் பரப்பின் ஒரு பகுதி அல்ல. ஒறுநிலை உதை எடுக்கப்படும் பொழுது மட்டும், ஒறுநிலைப் புள்ளியில் இருந்து 10 கெச தூரத்திற்கு அப்பால் எல்லா ஆட்டக்காரர்களும் நின்று கொண்டிருக்க வேண்டும் என்ற எல்லையைச் சுட்டிக் காட்டவே இது பயன்படுகிறது.

(இ) முனைப்பரப்பு (Corner – Area) பக்கக்கோடும் கடைக் கோடும் இணையும் இடத்தில் கொடி ஒன்று ஊன்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு முனையில் இருந்தும், ஆடுகளத்தின் உட்பகுதியில் ஒரு கெச ஆரத்தில் கால் வட்டப் பகுதி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதுவே முனைப்பரப்பாகும்.

பயன்: முனை உதை உதைக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தாக்கும் குழுவினர் இந்தக் கால் வட்டப் பரப்பினுள்ளே பந்தை வைத்துத்தான் உதைக்க வேண்டும்.

(ஈ) இலக்கு (Goal) ஒவ்வொரு கடைக்கோட்டின் மத்தியிலும், ஒரு இலக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முனை யிலிருந்தும் சம அளவு (உள் அளவு) தூரம் உள்ளதாக அளவெடுத்து, கடைக்கோட்டின் மையத்தில் 8 கெச தூரத்தில், 8 அடி உயரமுள்ள இரு கம்பங்கள் நிறுத்தப்பட்டு, அதன்மேல் குறுக்குக் கம்பத்தின் உயரத்தை அதன்படி அடிப்பாகத்திலிருந்து அளந்தால், 8 அடி உயரம் இருக்க வேண்டும். இலக்குக் கம்பங்கள், குறுக்குக் கம்பம் இவைகளின் அகலமும் பருமனும் 5 அங்குலத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும்.

நெடுங்கம்பங்கள், குறுக்குக் கம்பம் மற்றும் தரை இவைகளை இணைப்பது போன்று, இலக்குக்குப் பின்னால், திண்மையான வலை ஒன்று கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த வலை இலக்கைத் தெளிவாகக் காட்ட சிறப்பாக பயன்படுவதோடன்றி, இலக்குக் காவலனுக்குத் தடையில்லாமல் இயங்கிட வேண்டியவாறு இடம் அளிக்கும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்.

குறுக்குக் கம்பத்திற்குப் பதிலாக நாடாவையோ (Tape) அல்லது மற்ற வளைந்து கொடுக்கும் பொருட்களையோ உபயோகிக்கக் கூடாது.

இலக்குக் கம்பம் வெள்ளைப் பூச்சுப் (White Paint) பெற்றிருக்க வேண்டும்.

You Might Like

 

Leave a Comment